
பத்துமலை, ஜன 16-
நாட்டில் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம் வந்த கர்ப்பால் சிங் இந்திய சமுதாயத்தின் தலைவராக விளங்கினார் என்று பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா புகழாரம் சூட்டினார்.
கர்ப்பால் சிங் இந்திய சமுதாயத்தின்
கிங்காகவும் வலம் வந்தார்.
இந்திய சமுதாயத்திற்காக பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்.
இந்திய சமுதாயத்திற்காக போராடியவர். அவரின் புதல்வர் கோபிந்த் சிங் டியோ இப்போது டிஜிட்டல் துறை அமைச்சராக இருக்கிறார்.
இவரும் ஒரு சமுதாய போராட்டவாதி என்று அவர் சொன்னார்.
இவர் இந்து, அவர் சீக்கியர் என்று பிரித்து பார்க்காமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று ஒரு குடையின் கீழ் இணைவோம்.
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்திய சமுதாயத்திற்கு நல்லதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.
பத்துமலை
ஐயப்பன் கோயில் திருத்தலத்தில் நேற்று மகரஜோதி திருவிழா தரிசனம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த தரிசனத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்த கோபிந்த் சிங் டியோவுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் யுவராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது 25 ஆண்டுகால நண்பரான மாண்புமிகு சுரேஸ் சிங் அவர்கள் ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகத்தின் போது 5,0000 வெள்ளி வழங்கியதற்கும் அவர் நன்றி பாராட்டினார்.
இதனிடையே இந்த விழாவில் பேசிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று கேட்டுக் கொண்டார்.

