
பத்துமலை, ஜன 16-
சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வு மகரஜோதி தரிசனமாகும்.
மண்டல பூஜையை தொடர்ந்து மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்திருக்கும்.
அதேபோல் மலேசியா சபரிமலை என்றழைக்கப்படும் பத்துமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முத்தாய்பு நிகழ்ச்சியாக மகரஜோதி திருவிழா தரிசனம் நடைபெற்றது
பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குப்புசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மகரஜோதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு வருகை புரிந்து மகரஜோதி திருவிழாவில் கலந்து சிறப்பித்தார்.
மகர சங்கராந்தி நட்சத்திரத்தில் தைப்பொங்கல் திருநாளில் இந்த மகரஜோதி திருவிழா வருட வருடம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கு
ஐயப்பன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா மாலை அணிவித்து சிறப்பித்தார்.
பின்னர் பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பொங்கல்” என்பது தமிழ் நாட்காட்டியில் “தை” மாதத்தின் முதல் தேதியில் வரும் அறுவடைப் பண்டிகையாகும்.
பக்தர்கள் 42 நாட்கள் விரதத்தை நிறைவு செய்யும் ஐயப்பனுக்கான சடங்கையும் இந்த விழா குறிக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க என்னை அழைத்த பத்துமலை ஐயப்ப தேவஸ்தானத்தின் நிர்வாக நிர்வாக குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த விழாவில்
டமான்சாரா நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ் சிங், அமைச்சரின் செயலாளர் மண்டிப் சிங் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

