பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்குஅமைச்சர் கோபிந்த் சிங் டியோ 20,000 வெள்ளி மானியம்!

பத்துமலை, ஜன 16-
பத்துமலையில் அருள் பாலித்து கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.

மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு பத்துமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த தரிசனத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20 ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக அவர் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்.

டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ் சிங், மண்டிப் சிங், உலு சிலாங்கூர் பிரான்ஸ், முரளி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles