
கோலாலம்பூர் ஜன 21-
மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் கட்டட நிதிக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்தார்.
மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது பலத்த கைத்தட்டலுக்கு இடையே அவர் இந்த அறிவிப்பை செய்தார்.
சோலை பாஸ்கரன் தலைமையில் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் சொந்த கட்டத்தை வாங்கும் முயற்சியை பெரிதும் பாராட்டுகிறேன்.
இந்த முயற்சிக்கு எனது பங்களிப்பாக 30,000 வெள்ளியை வழங்குவதாக அவர் அறிவித்தார்.
டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ் சிங், டத்தோ சகாதேவன், டத்தோஸ்ரீ தேவமணி, ரத்னவள்ளி அம்மையார், வழக்கறிஞர் மனோகரன், டத்தோ ஜெனா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

