மலேசிய இந்திய இசைவிழா 2024! 12 மணிநேர இடைவிடாத இசைக் கொண்டாட்டம்!

கோலாலம்பூர், ஜன.20-
மலேசிய இந்திய இசைக்குழு விழா 2024 வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுங்கை ஓசை தி பேஸ் கேஎல் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டு நிறுவனமான ஜெனிரா கிரேடீப் புரோடக்‌ஷன் நிறுவனத்தின் (Genira Creative Production) தலைமை செயல் அதிகாரி காயத்திரி தண்டபாணி தெரிவித்தார்.

இவ்விழாவில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் இசை ஆர்வலர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரமாண்டமான இசை விழாவில் 20 இந்திய இசைக் குழுவினர் 12 மணிநேரத்திற்கு இடைவிடா படைப்பை வழங்கவுள்ளனர். எனவே, படைப்புகளின் எல்லையை தாண்டி மறக்க முடியாத அனுபவத்தை இந்த இசை விழா வழங்கும்.

விழா நடைபெறும் அரங்கத்தின் வளாகத்தில் பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதுமட்டுமின்றி, மினி மிருகக்காட்சி சாலை, ஹோலி கொண்டாட்டம், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காட்சி என ஏற்பாடு செய்யப்படுள்ளது.

இந்த இசைவிழாவை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிக்கு நுழைவு இலவசம். இசை விழாவிற்கான டிக்கெட்டுகள் தற்போது இணையம் வழி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் வழி கிடைக்கும் பணத்தில் 100 மரக்கன்றுகள் வாங்கி நடுவதற்கு வழங்கப்படும் என்றும் காயத்ரி தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 011-26277310 என்ற எண்ணுடன் Clament-ஐ தொடர்பு கொள்ளலாம்.

மலேசிய கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கின் சிறந்தவற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் ஜெனிரா கிரேட்டீவ் புரோடக்‌ஷன் நிறுவனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கலாச்சார கொண்டாட்டங்கள், இசை விழாக்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் வழி மக்களை ஒன்றிணைப்பதை இந்நிறுவனம் முதன்மை கொள்கையாக கொண்டுள்ளது. மலேசிய இந்திய இசைக்குழு விழா 2024-ஐ பற்றிய அண்மைய தகவலைப் பெற சமூக ஊடகத்தின் வாயிலாக எங்களைப் பின் தொடரலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles