எதிர்காலத்திற்கு நாம்தயாராக வேண்டும்!அமைச்சர் கோபிந்த் சிங் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜன 21-
நமக்கு முன்னால் பல சவால்கள் உள்ளன. ஆகவே எதிர்காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.

டிஜிட்டல் மாற்றம் இந்த அரசாங்கத்தின் முக்கிய கவனம். வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க டிஜிட்டல் அமைச்சை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைத்துள்ளார்.

இந்த நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவும் முயற்சிகளில் டிஜிட்டல் அமைச்சு அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்படும்.

தொழில்நுட்பம் அச்சுத் தொழிலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது கடந்த கால மற்றும் தற்போதைய புதிய வணிக முறைகளை எதிர்காலத்தில் மாற்றும்.

வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதில் தொழில்துறையை ஒன்றிணைப்பதில் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் போன்ற இதர சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த அரசாங்கம் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் தொழில்நுட்பத்துடன் நாம் காணப்போகும் மாற்றத்திற்கு அனைவரும் தயாராக இருப்பதை உறுதிசெய்ய எங்களால் இயன்ற வழிகளில் உதவுவோம் என்று அவர் சொன்னார்.

சோலை பாஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்ற மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles