
கோலாலம்பூர் ஜன 21-
டிஜிட்டல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ அவர்கள் மிகவும் சிறப் பான சேவையாளர் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் புகழாரம் சூட்டினார்.
இவர் எனக்கு நீண்ட காலமாக பரிச்சியம் ஆனவர் என்பதுடன் முன்னால் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்திய சமுதாய த்தின் மேம்பாட்டி ற்கு நிச்சயமாக உதவி
செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.
அதேபோல் தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன் அவர்களும் ஒரு அன்பும் பண்பும் நிறைந்த மாமனிதர் என்று குறிப்பிட்டார்.
மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் சொந்த கட்டத்தை வாங்கும் முயற்சிக்கு நாம் ஆதரவு தர வேண்டும்.
அச்சு தொழில் நமது பாரம்பரிய தொழிலாகும். இதை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
சோலை பாஸ்கரன் தலைமையில் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ரத்னவள்ளி அம்மையார் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

