டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் காலமானார்!

நாட்டில் முதல் பெண்மணியாக அரசாங்க பொது சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவரான  டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன்(வயது 100) நேற்று  காலமானார்.

 தமது இறுதி காலம் வரை மஇகா உறுப்பினராக விளங்கிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் காலமானதை அவரின்பேரனான தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சரான  டத்தோஆர்.ரமணன் உறுதிப்படுத்தினார்.

 “வயோதிகம்  காரணமாக அவர் காலமானார்” என்று   சுங்கை பூலோ பிகே ஆர் நாடாளுமன்றஉறுப்பினருமான ரமணன்  கூறினார்.

கடந்த 1952 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் நகராண்மைக் கழக உறுப்பினராக வெற்றி பெற்ற தேவகி இதேஆண்டில் பங்சார் தொகுதியிலும் வென்றார்.

ஓன் ஜாஃபார் காலத்தில் பல்லினங்களைக் கொண்ட மலாயா கட்சியில் இணைந்து சேவையாற்றிய  இவர்  1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

பொது தற்காப்பு பிரிவு உறுப்பினர் என்ற வகையில் 1969 ஆம் ஆண்டு மே கலவரத்தின்போது மெர்டேகாஸ்டேடியத்தில் மருத்துவ முகாமிற்குப் பொறுப்பேற்றிருந்தார்கலவரத்தில் பாதிக்கப்பட்ட 3,500 பேர் மற்றும்வீடுகளின்றி  இருந்தவர்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை இவர் ஏற்றிருந்தார்  என்பதுகுறிப்பிடத்தக்கது.

தனித்து வாழும் தாய்மார்களுக்கு தங்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் உரிமை வழங்கப்படுவதற்குஏதுவாக 1999 ஆம் ஆண்டு குழந்தைகள் பாதுகாப்பு  சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் தேவகி மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளார்

மஇகா மகளிர் தலைவியாகச் செயல்பட்ட வேளையில் பெண்கள் நலன் மற்றும் கட்சியின் மேம்பாட்டிற்கும்   பல ஆக்கப்பூர்வ திட்டங்களை கொண்டு வந்தவர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles