
பதினைந்தாவது பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ள காரணத்தால் அதிக வாக்குகள் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த பதிமூன்றாவது பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (5-5-2013) நடத்தப்பட்ட போது 84.84 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதன் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக டாருள் ஏசான் கழகத்தின் (ஐ.டி.இ.) ஆராய்ச்சி பிரிவு நிர்வாக கைருள் அரிபின் முகமது முனிர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
எனினும், கடந்த 14வது பொதுத் தேர்தல் புதன் கிழமை நடத்தப்பட்டதால் (9-5-2018) 82 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவானதாக அவர் சொன்னார்.

