
கடுமையான உழைப்பும் உத்வேகமும் இருந்தால் வரும் பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தை பாரிசான் நேஷனல் கூட்டணியிடமிருந்து பக்கத்தான் ஹராப்பான் கைப்பற்ற முடியும்.
பாரிசான் கோட்டையாக இருநாள் வரை இருந்து வரும் பகாங் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஊடுருவுவதற்கு அந்த கூட்டணிக்கு பொதுமக்கள் தொடர்ந்து வற்றாத ஆதரவை வழங்குவது அவசியம் என்று பகாங் மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்
நம்மிடம் உள்ள உத்வேகத்தைக் கொண்டு வரும் பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தை ஹராப்பான் கூட்டணி வெல்ல முடியும் என நான் நம்புகிறேன். இந்த வெற்றியை அடைவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஒருவரை மட்டும் சார்ந்திருக்க க்கூடாது என்று அவர் சொன்னார்..\

