
நாட்டில் 15 ஆவது பொதுத் தேர்தல் களைக்கட்டியிருக்கும் வேளையில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ளது.
தெலுக் இந்தான் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் சிசிலி முர்னி என்று வர்ணிக்கப்படும் முரளி பாலா களத்தில் இறங்குகிறார்.
தெலுக் இந்தான் மண்ணில் பிறந்த வளர்ந்த முரளி பாலா தற்போது பார்ட்டி சிந்தா மலேசியா கட்சியின் தேசிய தகவல் பிரிவுத் தலைவராக இருக்கிறார்.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சமூக பணி ஆற்றி வரும் முரளி பாலா உள்ளூர் மக்களின் செல்லப்பிள்ளை ஆவார்.
உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு அதிக அளவில் உதவிகளை புரிந்து இருக்கும் முரளி பாலாவை உள்ளூர் வாக்காளர்கள் நேசிக்கிறார்கள்.

தெலுக் இந்தான் தொகுதியில் உள்ள காயாங்கான் இ- ஸ்போர்ட்ஸ் கால்பந்து கிளப் உட்பட முதியோர் இல்லம், பரிவுமிக்க இல்லம் மற்றும் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பேருதவி புரிந்துள்ளார்.
இவரின் தந்தை அமரர் பாலா தெலுக் இந்தான் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றினார்.
ஜநா மனித உரிமை ஆணையத்தில் மலேசியாவை சார்பில் மனித நேயம் குழுவில் இருந்து ஆசியான் பிரதிநியாகவும் இருந்து சேவையாற்றி இருக்கிறார்.

