
கடந்த 1886 ஆம் ஆண்டு பதிவு பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயமாகக் கருதப்படும் பினாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தை பினாங்கு மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னமாகப் பதிவு பெற பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி ஆதரவு வழங்கி உள்ளதாக ஆலய ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.

பினாங்கு மாநில சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின் அவர்களைச் சந்தித்து பினாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தைப் பாரம்பரிய சின்னமாகப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உதவிய பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவரான பேராசிரியர் ப.இராமசாமிக்கு பினாந்தி வாழ் பொது மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

