சுங்கைப்பட்டாணி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

சுங்கைப்பட்டாணி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

பல ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இவ்வாலயத்தின் திருப்பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது

இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் கும்பாபிஷேக விழா காலை 8.23 மணி முதல் 10.10 மணி வரை நடைபெறவுள்ளது.

காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்படும்.

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரொய சுவாமிகள் உட்பட

பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் முதல்வர் சிவஸ்ரீ டாக்டர் பிச்சை சிவாச்சரியார் ஆகியோர் தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

ஆகவே இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles