47 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மானியம் வழங்கியது!

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 47 ஆலயங்களின் மேம்பாட்டிற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் மானியம் வழங்கியது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் 47 ஆலயங்களுக்கு 535000 ரிங்கிட் நிதி பகிர்ந்து வழங்கியது

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் ஏற்பாடு செய்திருந்த சிலாங்கூர் மாநில தைப்பூச திருவிழாநிகழ்ச்சியில் ஆலயங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசாரான டத்தோஶ்ரீ அமிருடீன் ஷாரி ஆலய பிரதிநிதிகளிடம்  மானியத்திற்கான காசோலையை எடுத்து வழங்கினார்.

கடந்த 2008 சிலாங்கூர் மாநிலத்தை பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சி செய்ய தொடன்கியது முதல் இன்று வரையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆலயங்களுக்கான இந்த மானியம் வழங்கப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வி.பாப்பாராய்டு கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதி ராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், கெஅடிலான் கட்சி துணை செயலாளரும் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன், மாரியம்மன் கோவில் தேவஸ்தான அரங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles