தைப்பூசத் திருவிழாஇனங்களுக்கிடையில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் மதிப்புகளின் அடையாளம்!அமைச்சர் கோபிந்த் சிங் புகழாரம்

பத்துமலை, ஜன 25-
மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு தைப்பூச தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று தமது உரையில் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழா மலேசியாவில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் மதிப்புகளின் அடையாளமாக விளங்குகிறது.

உலகில் உள்ள இந்துக்களை ஈர்க்கும் திருவிழாவாக பத்துமலை தைப்பூசம் விளங்குகிறது என்பதை வரலாறுகள் கூறுகின்றன.

மடானி மலேசியா பல்வேறு இனக்களிடையே மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்பை வலியுறுத்துகிறது

நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு மற்றும் தியாகத்திற்காக மலேசிய அரசு இந்திய சமூகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்..

இன்று பத்துமலை முருகன் பெருமான் திருத்தலத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles