கம்போங் கபாயாங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி – அ.சிவநேசன்

கோப்பெங், ஜன. 25: பேரா மாநிலத்தில் மிகவும் பிரசித்து பெற்றதோடு, ஆலய நிர்வாகம் எந்தவொரு பிரச்சினையின்றி சிறப்பாக செயல்படும் கம்போங் கபாயங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு பேராக் மாநில சார்பில் 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இந்த ஆலயத்தின் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆலயத்தின் நிர்வாகத் திறமைக்கு வாழ்த்தினையும், பாராட்டையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

பேரா மாநிலத்தில் 500 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஆலயங்கள் உள்ளன. இன்னமும் பல ஆலயங்கள் பதிவு பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரியான திருவிழா காலங்களில் பொதுமக்கள் சுகாதாரத்ததிற்கு அதிக முக்கியத்துவமளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles