மலேசிய இந்திய மக்கள் தொகையின் உண்மையான கணக்கு என்ன!?சமூக ஆர்வலர் சந்திரசேகரன் கேள்வி

கோலாலம்பூர் ஜன 31-
சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தமிழ் கடவுளான முருக பெருமானின் தைப்பூச திருவிழாவிற்கு கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை பார்க்கும் போது மலேசியாவில் இந்திய மக்களின் தொகை எவ்வளவு என்ற ஜயம் பிறந்துள்ளதாக சமூக ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய மக்கள் கணக்கு எடுப்பு வாரியமான (டிஒஎஸ்எம்) அறிக்கையின் படி மலேசிய இந்தியர்களின் மக்கள் தொகை 22 லட்சம் ஆகும் அதாவது 6.6 சதவீதம் ஆகும்.

ஆனால் தைப்பூச விழாவில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தை வெளிநாட்டு செய்தி நிறுவனம், கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில் மட்டும் 20 லட்சம் மக்கள் திரண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போன்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் பினாங்கு தண்ணீர் மலையில் 10 லட்சம் மக்கள் கூடியதாகவும்,பிறகு பேரா கல்லுமலையில் 3 லட்சம் மக்கள் பிற மாநிலங்களில் சரியாக 5 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.

அப்படி என்றால் தைப்பூசத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருந்தவர்களின் எண்ணிக்கை என்ன?

எனவே இந்த தகவல் அனைத்தையும் வைத்து பார்க்கும் போது மலேசிய இந்தியர்களின் உண்மையான கணக்கு இன்னும் அதிகமாக இருக்க கூடிய சாத்தியம் இருப்பதாக சமூதாய சிந்தனையாளருமான அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles