
கோலாலம்பூர், ஜன.31-
நாட்டில் உள்ள 40,000 டாக்சி ஓட்டுநர்களுக்கு சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் பாதுகாப்பு வழங்க போக்குவரத்து அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது.
பெரும்பாலும் முதியோர் மற்றும் ஆயுதப்படையின் மூத்த வீரர்கள் டாக்சி ஓட்டுநர்களாக உள்ளனர். ஆகவே, அவர்களின் நலனை காப்பதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
“ஊழியர்களின் சேமநிதி வாரியம் (EPF) அல்லது சொக்சோவிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், குறைந்த பட்சம் இந்த காப்பு திட்டம் பாதுகாப்பை வழங்கும் என்றார்.

