பத்துமலை தமிழ்ப்பள்ளியில்இலக்கை நோக்கி கருத்தரங்கில்450 மாணவர்கள் பங்கேற்றனர்!

கோலாலம்பூர், ஜன.31-
பத்துமலை, தேசிய வகை தமிழ்ப் பள்ளியின் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

“இலக்கை நோக்கி” என்ற தலைப்போடு நாடறிந்து மேடை மற்றும் வானொலி அறிவிப்பாளரும் தன்முனைப்பு பேச்சாளர் கவிமாறன் அவர்கள் இதனை மிகச் சிறப்பாக தன்னுடைய பாணியில் வழி நடத்தினார் கிட்டத்தட்ட 450 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்,

ஒழுக்கம், எதிர்காலம், எதிர்கால சிந்தனை, ஒற்றுமை, மனித நேயம், சமுதாய கடப்பாடு என நல்ல கருத்துக்களை முன்னிறுத்தி இந்த கருத்தரங்கு பள்ளியின் ஆதரவோடு தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது..

கல்வி கற்ற சமுதாயமாக வர்த்தகத்தில் மேலோங்கிய சமுதாயமாக எதிர்காலத்தில் மாணவர்கள் விளங்க இந்த கருத்தரங்கு மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles