மலேசியாவின் 17வது மாமன்னராகசுல்தான் இப்ராஹிம் பதவியேற்றார்

கோலாலம்பூர், ஜன 31-
மலேசியாவின் 17ஆவது மான்னராக மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இன்று பதவியேற்றார். அவர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருவார்.

ஐந்தாண்டு தவணைக் காலத்தை நேற்றுடன் முடித்துக் கொண்ட அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிடமிருந்து சுல்தான் இப்ராஹிம் இப்பொறுப்பினை ஏற்றார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் 264ஆவது சிறப்புக் கூட்டத்தின் போது பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவும் துணைப் பேரரசராகப் பதவியேற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles