கல்வி வேலைக்கானது அல்ல – வாழ்க்கைகானது!!

சுங்கை,பிப்01:
கல்வி என்பது வேலைக்கானது அல்ல.வேலை தேடுவதற்காக மட்டுமே கல்வியை நாடக்கூடாது.கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கானது.எனவே,கல்வி மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்றே தவிர,அது வேலைக்கானது அல்ல என்று சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மோகன் நினைவுறுத்தினார்.

கல்வி அறிவு சார்ந்த ஒன்று.அது மனிதனை நெறியோடும் அவனது வாழ்வின் மேம்பாட்டிற்கும் நன்நிலைக்கும் உயர்த்தும் என்றும் கூறிய அவர் அதனை தான் நம் முன்னோர்கள் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்கான்பித்தார்.

பள்ளியின் பரிசளிப்பு விழாவில் தலைமையுரை ஆற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்,இப்பள்ளி மாணவர்களை பொருத்தமட்டில் பெற்றோர்களின் பங்களிப்பு நிறைவாக இருப்பதாகவும் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி அவர்களின் உணவு,உடல் ஆரோகியத்திலும் பெற்றோர்களின் பங்களிப்பும் செயல்பாடும் சிறப்பாகவே இருப்பதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி,இப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் செயல்பாடும் நனிச் சிறந்த நிலையில் இருப்பதாகவும் அவர்களின் கற்றல் கற்பித்தலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் பள்ளிக்கும் மாணவர்களுக்கு நல்லதொரு இலக்கை எட்டுவதற்கும் சாதிப்பதற்கும் ஊக்கமூட்டும் வகையில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் வாரியக்குழுவும் நிறைவான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவது பள்ளியின் செயல்பாடுகளுக்கு ஆக்கப்பூர்வமாக அமைந்திருப்பதாகவும் கூறினார்.

மேலும்,பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் தொடர்ந்து கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் தங்களின் திறனையையும் ஆளுமையையும் வளர்த்தெடுத்து கொள்ள வேண்டும் எனவுன் அறிவுறுத்தினார்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற பரிசளிப்பு விழா மாணவர்களின் படைப்புகளோடு நிறைவுப்பெற்ற வேளையில் எழுத்தாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான சிவாலெனின் மற்றும் திருமதி.நோராஸ்லினா ஆகியோர் சிறப்பு வருகையும் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles