
கோலாலம்பூர், பிப் 3-
பத்துமலை தைப்பூச உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் பொருளாளர் டத்தோ பி. அழகன், செயலாளர் சேதுபதி, அறங்காவலர்கள் சந்திரசேகரன், கதிரேசன், நாராயணசாமி மற்றும் டத்தோ கண்ணா சிவகுமார் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
இன்று காலை பத்து மணிக்கு மேல் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத்தில் மிக சிறப்பாக சேவையாற்றிய தொண்டர்கள், பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினர், ரேலா படையினர், முதலுதவி சேவைகள் வழங்கிய தொண்டர்கள் அனைவருக்கும் டத்தோ அழகன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

