குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு’தமிழ் இலக்கிய மரபுக் காவலர் விருது”

கோலாலம்பூர், பிப்.3-
சென்னை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘தமிழ் இலக்கிய மரபுக் காவலர்’ என்ற கௌரவ விருது தமிழகத்தின் கல்வித்துறை மற்றும் பொது நூலக அமைப்பின் சார்பாக ஆசியாவின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகாலயமான ஜெயபக்தி பதிப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய திருநாட்டில் தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகித்து, இலக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு தமிழ் இலக்கிய மரபுக் காவலரின் விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

மலேசியாவில் தமிழ் மொழியில் நிபுணத்துவம் பெற்ற புத்தக விற்பனையாளராக Penerbitan Jaya Bakti நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

மலேசியாவில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஜெயபக்தி நிறுவனத்தின் அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் மேலும் நீண்டகால
சேவையின் அடிப்படையில் இந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் இந்த விருதினை நேரில் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியக் காவலரின் கெஸ்ட் ஆஃப் கெஸ்ட் விருது’ பெரும் மரியாதையைக் குறிக்கிறது என்று தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்குனர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் K Elambahavath, I.A.S தெரிவித்தார்.

தமிழ் இலக்கியத்தில் ஜெயபக்தியின் அர்ப்பணிப்புக்காக இலக்கியச் சமூகம் வைத்திருக்கும் பாராட்டாக இது விளங்குகிறது.

ஜெயபக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மரியாதைக்குரிய நிகழ்வு, அதன் அந்தஸ்தை பெரிதும் மேம்படுத்துவதோடு மகத்தான பங்களிப்பையும் வழங்கும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே தமிழ் நாடு அரசால் குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரமாக விளங்குகிறது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles