
கோலாலம்பூர் பிப் 4-
ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இப்போது தண்டனை காலம் ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 21 கோடி வெள்ளி அபராதம் இப்போது 5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நஜிப்புக்கு தண்டனை காலம் குறைப்பு என்பது வரும் பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
இந்த தண்டனை குறைப்பை எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் நகருக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள்.
மேலும் இப்போது எதிர்க்கட்சி கூட்டணிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவ அமோகமாக இருக்கிறது.
அடுத்த பொது தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை நோக்கி அவர்கள் வெற்றிகரமாக முன்னேறுவார்கள் என்றார் அவர்.

