
சுங்கைப்பட்டாணியில் அருள்மிகு சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
விமரிசையாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழா, பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வேதாகம பாடசாலை முதல்வரான சைவப் பேரரசர் விகாஸ் ரத்னா, சிவஸ்ரீ டாக்டர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அவரின் சீடர்களான தமிழகத்தில் உள்ள பல முக்கிய சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காலையில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நிறைவேற்றப்பட்ட பின் சிவஸ்ரீ டாக்டர் பிச்சை சிவாச்சாரியார் அவரின் திருக்கரங்களால் ஆலயத்தின் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த அருள்மிகு சிவலிங்கேஸ்வரர் ஆலயம் பல ஆண்டுகள் வரலாற்றை கொண்டதாகும். பல ஆண்டுகளாக இவ்வட்டார மக்களுக்கு அருள்பாலித்துவரும் சிவபெருமான் இன்று முதல் ஆலயத்தின் புது பொழிவுடன் பக்தர்களுக்கு காட்சி தருவது தமக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மாலையில் திருக்கல்யான வைபவமும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேகத்தின் தொடர்ச்சியாக ஆலயத்தில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.

இப்பூஜைகளிலும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு உபயதாரர்களான திருமதி பாக்கியவதி குடும்பத்தினர் மற்றும் சிவ ஶ்ரீ குகேஸ்வரன் – ஶ்ரீமதி ஜோதி குடும்பத்தினருக்கும் ஆலய தலைவர் டாக்டர் கேசவன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பெரும் ஆதரவாக இருந்த டத்தோஶ்ரீ தனேந்திரன் மற்றும் அனைத்து தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆலய உறுப்பினர்களுக்கும் டாக்டர் கேசவன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

