ATC Academy நிறுவனத்திற்குசிறந்த தீவேட் தொழில் திறன் கல்வி விருது!

கோலாலம்பூர் பிப் 5-
மிம்கொய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறந்த தொழில் முனைவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனிதவள துணை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த விழா கோலாலம்பூர் மேட்ரேட் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

பிரபல தொழில் முனைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் மற்றும் பிரவின் செல்வத்தை உரிமையாளராக கொண்டிருக்கும் ATC Academy நிறுவனத்திற்கு சிறந்த தீவேட் தொழில் திறன் கல்வி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் மேலும் பல தொழில் முனைவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மிம்கொய்ன் தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல் கான் தலைமையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles