ரவாங் கம்போங் கொஸ்கானில்சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் விழா!

ரவாங், பிப்.5-
தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று ரவாங்
கம்போங் கொஸ்கான் கிராம குடியிருப்பாளர்
மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின்
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களான
ப.புவனேஸ்வரன், வி.முருகன், ஆர்.ராஜசேகர், எஸ்.ஸ்ரீகாந்த், ராஜேஸ்ராவ், ஹயாத்தி சாட், இந்திய சமூகத் தலைவர் குணாளன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த பொங்கல் விழாவின் முத்தாய்ப்பு
அங்கமாகப் பொங்கலிடும் போட்டி, சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டன.

இந்த பொங்கல் நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த கம்போங் கொஸ்கான் கிராமத் தலைவர் குமார் ராவ் மற்றும் எம்.பி.கே.கே. நிர்வாகத்தினருக்கும் டாக்டர் சத்திய பிரகாஷ் நன்றியையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles