
சீனப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 13ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ள 21வது ஓப் செலாமாட் இயக்கத்தின் ஒரு பகுதியாகச் சிலாங்கூரிலுள்ள ஐந்து மாவட்டங்களில் ஓப் லஞ்சார் இயக்கத்தை மாநிலப் போலீஸ் துறை மேற்கொள்ளவுள்ளது.
கோம்பாக், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், செர்டாங், வட கிள்ளான் ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் இடம் பெற்றுள்ளதாகச் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

