
நாட்டில் புகழ்பெற்ற ATC Academy- க்கு சிறந்த தீவேட் தொழில் திறன் கல்வி விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய உற்சாகத்தைத் தருகிறது என்று அதன் உரிமையாளர் டத்தோ தமிழ்ச் செல்வம் தெரிவித்தார்.
தீவேட் தொழில் திறன் கல்வி மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமை ATC Academy- க்கு இருக்கிறது. திறமையான தொழில்திறன் மாணவர்களை உருவாக்குவதில் ATC Academy நிபுணத்துவம் பெற்றுள்ளது என்றார் அவர்.
அந்த வகையில் மிம்கொய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறந்த தீவேட் தொழில் திறன் கல்வி விருதை ATC Academy க்கு மனிதவள துணை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் வழங்கி இருப்பது பெரும் உற்சாகத்தைத் தருகிறது என்றார் அவர்.
பிரபல தொழில் முனைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் மற்றும் பிரவின் செல்வத்தை உரிமையாளராக கொண்டிருக்கும் ATC Academy Shah Alam நகரில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
மிம்கொய்ன் தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல் கான் தலைமையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

