
கிள்ளான், பிப் 7-
சொக்சோ நிறுவனத்தின் ஆதரவோடு சிலாங்கூர் மாநில அரசு நடத்திய My future Jobs கண்காட்சி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 27 நிறுவனங்கள் பங்கேற்று 4,000 வேலை வாய்ப்புகளை வழங்கியது.
நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைக்கும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் வேலை கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மக்கள் தங்களுக்குரிய வேலைகளை தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி.கண்ணன் தெரிவித்தார்.
சொக்சோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு கண்காட்சியில் மக்கள் அதிகம் அளவில் பங்கேற்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை குறைக்க முடியும்.
மேலும் வேலை கிடைக்கும் மக்களுக்கு புது வசந்தமும் ஏற்படும். அவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படும் என்றார் அவர்.

