தொழிலாளர்கள் விவகாரங்கள் தொடர்பாகமாநில அரசுடன் மனிதவள அமைச்சு நெருக்கமாக பணியாற்றும்!

புத்ராஜெயா, பிப்.8–
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பப்பர்ராயூடு நேற்று மரியாதை நிமித்தமாக புத்ராஜெயாவில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினார்.

சிலாங்கூர் அரசாங்கத்தில் மனிதவள துறைக்கு பொறுப்பேற்றுள்ள பப்பர்ராயூடு நேற்றைய சந்திப்பில் தொழிலாளர்கள் விவகாரங்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பு பெரும் பலனை தந்ததாக அவர் சொன்னார்.

அனைத்து மட்டங்களிலும் மற்றும் துறைகளிலும் உள்ளது தொழிலாளர்கள் தொடர்பான அழுத்தமான பிரச்சினைகளை தீர்க்க மனிதவள அமைச்சு மாநிலத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles