என் மீது நம்பிக்கை வைத்து பதவி வழங்கியபிரதமருக்கு நன்றி!பத்து எம்.பி. பிரபாகரன் நெகிழ்ச்சி

கோலாலம்பூர் பிப் 8-
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) சிறப்புக் குழுவின் தலைவராக என்னை நியமனம் செய்த பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

என் மீது முழு நம்பிக்கை வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த முக்கிய பதவியை வழங்கி இருக்கிறார்.

எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்புக்கு ஏற்ப சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோ ரமணன் சமீபத்தில் துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதால், பிரதமர் டத்தோ அன்வார் இப்ராகிம் மித்ராவின் புதிய தலைவராக பிரபாகரனை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles