
கோலாலம்பூர் பிப் 11-
கடந்த 5 பிப்ரவரி திங்கட்கிழமையன்று பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில்
ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான 13ஆவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன் தலைமையில் நடைபெற்ற இந்த
இப்பட்டமளிப்பு விழாவை ஆசிரியர்கள் திரு முருகன் ரெங்கநாதன் மற்றும் சுபத்ரா தேவி சண்முகம் ஆகியோர் அறிவிப்பாளர்களாக வழிநடத்தினர்.
ஆறாம் ஆண்டு மாணவர்கள் பட்டமளிப்பு ஆடையணிந்து இசையொலியுடன் மண்டபத்தினுள்ளே சபையோர் வியக்க நடந்து வந்து சிறப்பு இருக்கையில் அமர்ந்தனர்.
தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன் அவர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹரிராஜா தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் விக்னேஸ்வரன் நடராஜன், நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் சித்ரா தேவி ராமசாமி, மாணவர் நலத் துணைத் தலைமையாசிரியர் விக்டர் ஆசீர்வாதம், இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர் விஜயலட்சுமி பக்கிரி, மாலை நேரத் துணைத்தலைமையாசிரியர் கோமதி தம்புசாமி மற்றும் ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் படை சூழ குத்துவிளக்கு ஏற்றியபின் மேடையின் சிறப்பு இருக்கையில் அமர்ந்தார்.
தொடர்ந்து, தேசிய கீதம், மாநில கீதம், பள்ளிப் பாடல் ஒலிக்கப்பட்டது. பரதத்துடன் தொடங்கிய இவ்விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹரிராஜா தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற்றி வருகையாளர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன் அவர்கள் சிறப்புரையை ஆற்றி 13ஆவது பட்டமளிப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறப்பு செய்தார்.
நிகழ்வின் உச்சக்கட்டமாக பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹரிராஜா தட்சிணாமூர்த்தி மாணவர்களுக்கான நற்சான்றிதழை முறையே எடுத்து வழங்கினர்.
ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்கள் புனிதா சுகுமாறன், லெட்சுமி கோதண்டபாணி, பரமேஸ்வரி கிருஷ்ணன், கோகிலவாணி கன்னியப்பன், பிரேமா லெட்சுமணன் மற்றும் இந்திரா ஜெகநாதன் ஆகியோருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் செங்கல்ராயன் நற்சான்றிதழ் மற்றும் பூங்கொத்தினை வழங்கி கௌரவித்தார்.

