பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின்புதிய தலைவராகபத்துமலை பொறுப்பேற்றார்

கோலாலம்பூர் பிப் 11-
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக பத்துமலை பொறுப்பேற்றுள்ளார்.

நாட்டில் புகழ்பெற்ற கால்பந்து சங்கமாக பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் விளங்குகிறது.

16 ஆண்டுகளாக சிலாங்கூர் மற்றும் விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையே கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்திலும் அங்கம் வகிக்கும் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் இளம் ஆட்டக்காரர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தில் உதவித் தலைவர் மற்றும் துணை தலைவராக இதற்கு முன் பதவி வகித்த பத்துமலை இப்போது சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளது இனி வரும் காலங்களில் இந்த சங்கம் மென்மேலும் வளர்ச்சி காணும் என்று துணை தலைவர் குணசேகரன் மற்றும் கென்னத் கண்ணா ஆகியோர் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles