
சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டு பணிகளுக்காக பிரதமர் துறையின் வாயிலாக 91,975.00 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.
அன்மையில் பள்ளியின் பெற்றோர் ஆசியர் சங்கம் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோவை சந்தித்து பள்ளியின் சீரம்மைப்பு மற்றும் மேம்பாட்டு பணிக்காக மானியம் பெற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
பள்ளியின் கோரிக்கையை பிரதமர் துறைக்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்றியிருக்கின்றார் அமைச்சர் கோபிந்த் சிங்.
அண்மையில், அப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவின் போது அமைச்சரின் சிறப்பு அதிகாரியான சுரேஷ் சிங் மானியத்திற்கான காசோலையை நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.
இந்த நிதியை கொண்டு பள்ளியின் சிற்றுண்டி சாலை, பள்ளியின் நடைபாதை வளாகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் வசதிக்காக இதர மேம்பாட்டு பணிகளுக்கும் இந்த மானியம் பயன்படுத்தப்படும் என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமரகுரு மனோகரன் தெரிவித்தனர்.
தங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக மானியம் வழங்கி உதவி நல்கிய அமைச்சருக்கு குமரகுரு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பள்ளியின் பரிசளிப்பு விழாவில் பள்ளியில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுரேஷ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

