
கோலாலம்பூர் பிப் 12-
முற்றிலும் இந்தியர்களை கொண்டிருக்கும் லைடன் டான்ஸ் குருப் இப்போது நாடு தழுவிய அளவில் கலக்கி கொண்டிருக்கிறது.
Persatuan Tarian Singa Tai Yen, also known as Tamilan Lion Dance Team Rawang என்றழைக்கப்படும் இந்த சீன டான்ஸ் குருப்பை 38 வயதான ஆச்சி பாபு வழிநடத்தி வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த டான்ஸ் குருப் கோலாலம்பூர் மட்டுமின்றி பங்கோர், தஞ்சோங் மாலிம் உட்பட பல இடங்களில் தங்களது திறமையை நிரூபித்துள்ளது.
கல்யாணம், விருந்து நிகழ்ச்சி, புதுமனை திறப்பு விழா, கடைகள் திறப்பு விழா போன்ற விழாக்களில் லைடன் டான்ஸை படைத்து வருகிறோம் என்று பாபு தெரிவித்தார்.

