புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளி பரிசளிப்பு விழாவில் சிறந்த மாணவி விருது பெற்றார் காவியா!

அன்மையில் புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா மிக விமரியாக நடைபெற்றது.

பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியதோடும் மேலும் பல போட்டிகளிலும் வெற்றிகளும் பெற்று தந்த மாணவி காவியா சுகுமாரன் அவருக்கு பள்ளியின் சிறந்த மாணவி என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

பள்ளியின் தலைமையாசிரியர் கலாவதி மாணவி காவியாவுக்கு கோப்பையையும் சான்றிதழையும் எடுத்து வழங்கினார்.

பரிசளிப்பு விழாவில் வகுப்பு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கும் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவருமான ப.புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் எடுத்து வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் மாணவர்களின் இயல் இசை நாடகம் என சிறந்த கலை படைப்புகளை அரங்கேரச் செய்திருந்தது பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்திருந்தது குறிப்பிடத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles