டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புதல்வியின் திருமண வைபவம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் – புவான்ஸ்ரீ சுசித்தா தம்பதியரின் புதல்வி தனுஷாவின் திருமண வைபவம் இனிதே நடந்தேறியது.

நேற்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற இத்திருமண விழாவில் 10 ஆயிரம் பங்கேற்றனர்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார், டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிபேரரசு வைரமுத்து, நடிகரும் அரசியல்வாதியுமான கருனாஸ், உட்பட நாடு முழுவதும் உள்ள மஇகா உறுப்பினர்களும் பொது மக்களும் இத்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நடிகரும் உணவு துறையில் பிரபலமானவருமான
மாதம் பட்டி ரங்கராஜின் உணவு விருந்து படைக்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் தலை வாழை இலை உணவு பரிமறப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அமைந்தது.

பத்துமலை திருத்தலத்தில் 10 ஆயிரம் அமர கூடிய அளவில் குளிர் சாதன வசதியுடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles