
அபுதாபி, பிப் 15-
ஐக்கிய அரபு சிற்றரசுக்கு
சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அங்கு அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட சுவாமி நாராயணன் இந்து கோயிலை இன்று … இன்று திறந்து வைத்தார்.
பின்னர் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த கோவிலை திறந்து வைத்தது ஒரு பொன்னான அத்தியாயம் என்று அவர் சொன்னார்.
வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், மற்றும் லட்சக்கணக்கானோர் சார்பில் யு.ஏ.இ. அதிபர் முகமது பின் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

