Selangor Chester முதியோர் இல்லத்திற்குவிலாயா மாநில மைபிபிபி உதவிக்கரம்

கெப்போங், பிப் 14-
சமூகநல இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தன்னலம் கருதாமல் மைபிபிபி கட்சி தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் விலாயா மாநில மைபிபிபி தலைவரும் மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவருமான சத்தியா சுதாகரன் தலைமையில் அன்பர்கள் தினம்- சீன புத்தாண்டை முன்னிட்டு கெப்போங் வங்சா பெர்மாயில் உள்ள Selangor -Wilayah Chester சமூக நல இல்லத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்களுக்கு பெம்பர்ஸ், ஆங்பாவ் மற்றும் மின்சார கருவிகள் வழங்கப்பட்டது

மைபிபிபி கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, கெப்போங் மைபிபிபி தலைவர் இராஜேந்திரன் மற்றும் மைபிபிபி கட்சியின் பொறுப்பாளர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இல்லத்தில் தங்கியிருக்கும் அனைவரும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.

ஏழை எளிய மக்களுக்கும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கும் மைபிபிபி கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மைபிபிபி விலாயா மாநில மகளிர் அணிக்கு சத்தியா சுதாகரன் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles