நீரில் மூழ்கி மரணம் அடைந்தமூன்று பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்குபெருவாஸ் எம்.பி. நிதியுதவி

பெருவாஸ், பிப் 14-
நீரில் மூழ்கி மரணம் அடைந்த மூன்று பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு பெருவாஸ் நாடாளுமன்ற உருப்பினர் மாண்புமிகு டத்தோ Ngeh Koo Ham தலா ஆயிரம் வெள்ளி வழங்கி உதவி புரிந்தார்.

லுமுட் சிகாரி ஆற்றில் குளிக்க சென்ற தர்மராஜ், சரத் மற்றும் ஈஸ்வரப் பிள்ளை மூவரும் ஆற்றில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அம்முவரின் குடும்பத்தை நேரில் சென்று தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ Ngeh Koo Ham தம்மால் இயன்ற உதவிகளையும் செய்தார்.

மாவட்ட நகராண்மை கழக உறுப்பினர் முருகன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம்,
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி ஆகியோரும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles