புக்கிட் மெலவாத்தியில்குப்பை பிரச்சனை கட்டம் கட்டமாகத் தீர்க்கப்படுகிறது!தீபன் சுப்பிரமணியம் அறிவிப்பு

கோலசிலாங்கூர், பிப் 15-
புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் குப்பை பிரச்சனை கட்டம் கட்டமாக தீர்க்கப்பட்டு வருகிறது.

குப்பைகளை சேகரித்தல், அகற்றுதல் மற்றும் திறந்தவெளியில் எரித்தல் போன்ற பிரச்சனைகள் குறித்து தனது தரப்புக்கு பல புகார்கள் வந்துள்ளது என தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு மிகவும் திறமையான கிராமக் கழிவு மேலாண்மை முறையை அறிமுகப்படுத்துவது உட்பட சில உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

நாங்கள் கிராமத்தின் நலனில் கவனம் செலுத்துவோம்.
“குப்பை சேகரிப்பு சேவையை வழங்குவதோடு கூடுதலாகக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் பரஸ்பர ஒத்துழைப்புடன் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles