மலேசிய தெலுங்கு சமுகத்தின் வரலாற்றைபிரதிபலிக்கும் நூலை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வெளியீட்டார்!

சுபாங், பிப் 17-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் வரலாற்று நூலை ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று வெளியீடு செய்தார்.

சுபாங் ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் 68 ஆம் ஆண்டு கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

டாக்டர் மாலினி ரமணன் கடந்த 2006 – 2012 வரை மலேசிய தெலுங்கு சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து நூலை எழுதியுள்ளார்

அந்த நூலை இன்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வெளியீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு இந்திய அதிகாரி அர்வின் அப்பளசாமி 50,000 வெள்ளி கொடுத்து முதல் நூலை பெற்றுக் கொண்டார்.

இந்த நூலை சிறப்பான முறையில் ஆய்வு செய்து எழுதிய டாக்டர் மாலினி ரமணனை பாங்கி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மான் வெகுவாக பாராட்டினர்.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் மற்றும் துணை தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் விழாவில் பல முக்கிய பிரமுகர்களும் தெலுங்கு சங்க பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles