
சுபாங், பிப் 17-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் 68 ஆம் ஆண்டு கொண்டாட்டம் மாநாடு இன்று சுபாங் ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் மற்றும் துணை தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி, மொரிசியஸ் தூதர் ஜெகதீஸ்வரர் கேமபரதன், சைபர் ஜெயா பல்கலைக்கழக ஸ்தாபகர் டான்ஸ்ரீ பாலன், முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ தேவமணி, துரோனோ முன்னாள் சட்டமன்ற டெரென்ஸ் நாயுடு, மலேசிய தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் அச்சயக்குமார், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேன் கந்தசாமி, மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்ககணேசன், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தெலுங்கு சமூகத்தின் கலை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இடம் பெற்ற நடனங்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

