கல்விக்கு மைபிபிபி அதிக முக்கியத்துவம் வழங்கும்!உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி அறிவிப்பு

காஜாங், பிப் 17-
பல்லின மக்களைக் கொண்ட மைபிபிபி கட்சி கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் என்று அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி தெரிவித்தார்.

பல்வேறு போராட்டம் மற்றும் வழக்குகள் மத்தியில் இப்போது மைபிபிபி புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் கட்சியாக மைபிபிபி விளங்குகிறது.

மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளை தீர்க்க மைபிபிபி பாடுபடும். மக்களோடு மிகவும் அணுக்கமாக இருந்து மைபிபிபி சேவையாற்றும்.

மலேசியர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களின் கல்விக்கும் நாங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்போம் என்று அவர் சொன்னார்.

மைபிபிபி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் பக்கப் பலமாக இருந்து ஆதரவு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

காஜாங்கில் நேற்று தமிழ் ஊடகவியாளர்களுடன் உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்த சந்திப்பு நிகழ்வுக்கு டத்தோ மோகன் கந்தசாமி தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வை தமிழ் மலர் நிருபர் எம். ரவி ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றினார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles