Hs medi clinic ஏற்பாட்டில்மோகன் கிண்ண பெனால்டி கிக் போட்டியில்CG Jaya குழு சாம்பியன்

பெட்டாலிங், பிப் 19-
எச்.எஸ். மெடிக் கிளினிக் ஏற்பாட்டில் பெட்டாலிங் லோட் 10 திடலில் நடைபெற்ற பெனால்டி கிக் கிண்ணக் கால்பந்து போட்டியில் CG Jaya குழு வெற்றி பெற்று மோகன் சாம்பியன் கிண்ணத்தை வென்றது.

இந்த போட்டியில் மொத்தம் 64 குழுக்கள் கலந்து கொண்டன.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு CG Jaya மற்றும் Abu Bakar குழு தேர்வு பெற்றன.

இறுதி சுற்றில் 3-2 என்ற பெனால்டி கிக் கணக்கில் CG Jaya குழு வெற்றி பெற்று
மோகன் கிண்ணத்தை தட்டிச் சென்றது.

வெற்றி பெற்ற CG Jaya குழுவுக்கு 5,000 வெள்ளி ரொக்கம், கிண்ணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது இடத்தைப் பிடித்த அபு பாக்கார் குழுவுக்கு 2,500 வெள்ளியும் 3 ஆவது இடத்தை பிடித்த Airis குழுவுக்கு 1,000 வெள்ளியும் 4 ஆவது இடத்தை பிடித்த மை எப்சி. குழுவுக்கு 500 வெள்ளியும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற குழுக்களுக்கு டாக்டர் லோகா, மோகன் ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

நாட்டில் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் புவியரசன் இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles