
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் உள்ள தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுகிறார்.
பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணி கைவசம் உள்ள தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றும் முயற்சியில் இம்முறை பேராக்கில் போட்டியிடுகிறேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகையால் இம்முறை பேராக் மாநிலத்தை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் பேராக்கில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.
நம்பிக்கை துரோகிகள் அணி மாறியதால் ஆட்சியை இழந்தோம்.
ஆனால் இம்முறை அது நடக்காது.
னபேராக் மாநில மக்களை நம்மோடு இணைந்து எதிரிகள் கைவசம் உள்ள தொகுதிகளை கைப்பற்றி சாதனைப் படைக்க உற்சாகத்துடன் களத்தில் இறங்குவோம் என்று சிவகுமார் தெரிவித்தார்.

