Titiwangsa தொகுதியில் 700 இந்திய குடும்பங்களுக்கு டத்தோஸ்ரீ ஜோகாரி தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு yayassn bena nusa malaysia அறவாரியத்தின் தலைவரும் கூட்டரசு பிரதேச மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி இன்று அதிரடியாக களம் இறங்கி 700 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

இந்த நான்கு ஆண்டுகளில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் தித்தி வங்சா தொகுதி மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகிறார்.

கம்போங் பண்டான் இந்தியன் செட்டில்மென்ட்,
பண்டான் மாஸ் குடியிருப்பு. பிபிஆர் கோக்ரேய்ன்,பிபிஆர் லெக்ட்மணா, ஜாலான் பில் மற்றும் தாமான் மலூரி ஆறு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 700 இந்தியர்களுக்கு இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

தித்தி வங்சா தொகுதி ம இகா தொகுதி தலைவர் ஆர்.டி .சுந்தரம், துணை தலைவர் ஸ்ரீதரன்,பிரித்தீவீ கிளைத் தலைவர் ராஜா காளிமுத்து, ஜாலான் பிளங்காஸ் கிளை தலைவர் டாக்டர் ரவி மாரிமுத்து உட்பட 18 ம இகா கிளைத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து ஆதரவு வழங்கினர்.

இந்த தேர்தலில் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி மீண்டும் தித்தி வங்சா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் உள்ள இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவு வழங்கும் படி தொகுதி தலைவர் ஆர் டி சுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles