
பினாங்கு பிப் 22-
தெலுக் பகாங், ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோவிலில் நடைபெறவிருக்கும் ‘தெப்ப திருவிழாவை முன்னிட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில். பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
அனைத்து பக்தர்களும் விழாக்களில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக, பிப்ரவரி 24, 2024 அன்று தஞ்சோங் புங்கா மார்க்கெட்டில் இருந்து கோவிலுக்கு ரேபிட் பினாங்கு இந்த இலவச சேவையை வழங்குகிறது.
முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை இந்த இலவச பேருந்து சேவையில் ஈடுபடும் என்பதால் பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று செனட்டரும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் துணை தலைவருமான லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

