
கோலாலம்பூர், பிப் 22-
மனிதவள மேம்பாட்டுக் கழகம் (எச்.ஆர்.டி.கோர்ப்)
கடந்தாண்டு 220 கோடி வெள்ளியை லெவி தொகையாக வசூலித்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்டத் தொகை 181 கோடி
வெள்ளியாக மட்டுமே இருந்தது.
கடந்த 1993ஆம் ஆண்டு எச்.ஆர்.டி.கோர்ப் தொடங்கப்பட்டது முதல்
வசூலிக்கப்பட்ட தொகையில் மிக அதிகமானதாக இரு விளங்குகிறது
என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
கடந்தாண்டு எச்.ஆர்.டி.கோர்ப். 178 கோடி வெள்ளி மதிப்பிலான நிதியுதவி
மானியங்களை அங்கீகரித்துள்ளதோடு 22 லட்சம் பயிற்சித்
திட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் செய்தது என்று அவர் குறிப்பிட்டார். நேற்று இங்கு நடைபெற்ற எச்.ஆர்.டி.கோர்ப் ஏற்பாட்டிலான 2024
சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
அவர் இதனைத் தெரிவித்தார்

